தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் பெய்த மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று ஒரு பெண் மழை நீரில் அடித்து செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நெல்லை, தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 3 நாட்களுக்கு புதுவை மற்றும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.