மதுரையில் ரத யாத்திரை.. அனுமதி வழங்க போலீஸ் கமிஷ்னருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

மதுரையில் ரத யாத்திரை.. அனுமதி வழங்க போலீஸ் கமிஷ்னருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Update: 2021-02-19 18:42 GMT

அயோத்தியில் ராமருக்கு மிக பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரையில் ரத யாத்திரையை நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்று காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அதே சமயம் கொரோனா தொற்று இருப்பதால் கூட்டம் கூடுவதை தவிர்த்து நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

Similar News