ஓட ஓட விரட்டிப் படுகொலை.. சர்ச் வாசலில் வீசப்பட்ட தலை.. மதுரையில் பயங்கரம்.!

ஓட ஓட விரட்டிப் படுகொலை.. சர்ச் வாசலில் வீசப்பட்ட தலை.. மதுரையில் பயங்கரம்.!

Update: 2020-11-16 17:17 GMT

மதுரை மாநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட தலை தேவாலாய வாசலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழவெளி வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல், ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகானந்தம் என்ற நபரின் தலையைத் துண்டித்த கும்பல், செயிண்ட் மேரிஸ் தேவாலய வாசலில் வைத்து சென்றுள்ளது.

இந்த சம்பவத்தின்போது காரில் அந்த பக்கம் சென்றவர் ஒருவர் இதனை வீடியோ எடுத்துள்ளார். அதில், அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட கீழ்மதுரை முனுசாமி என்ற இளைஞர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை செயின்ட் மேரிஸ் தேவாலய வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தலை துண்டித்துக் கொல்லப்பட்ட மதுரை ஒத்தக்கடை முருகானந்தத்தின் மீது, பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. இதனிடையே பயங்கர ஆயுதங்களுடன் பழங்காநத்தம் ஆர்.டி.ஓ அருகே ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
 

Similar News