அலைக்கழிக்கப்படும் சவுக்கு சங்கர் - 25ம் தேதி வரை நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவல்

சவுக்கு சங்கருக்கு வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-11-13 14:09 GMT

சவுக்கு சங்கருக்கு வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அறிவிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சாரால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளுக்காக அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கடலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தி.மு.க அரசை தனியார் யூ ட்யூப் சேனலுக்கு அளிக்கும் பேட்டியில் அதிகமாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Source - Polimer News 

Similar News