மத்திய அரசின் மானியத்தில் சென்னை அருகே குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகள்.!

மத்திய அரசின் மானியத்தில் சென்னை அருகே குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகள்.!

Update: 2020-12-09 14:45 GMT

சொந்தமாக வீடு கட்டுவது என்ற  கனவை நிறைவேற்ற மத்திய அரசு அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்து கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. அவ்வவர் வருவாய்க் கேற்ப சுலபமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு பல வித மானியங்களையும் அமல் படுத்தி வருகிறது.  இந்நிலையில் சாதாரண மக்களின் கனவை நிறைவேற்ற அரசுகள் சார்பில் குடிசை மாற்று வாரியம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 

இத்திட்டத்தின் படி பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10.20 லட்ச ரூபாயில், 400 சதுர அடி பரப்பளவு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை, குடிசை மாற்று வாரியம்அறிவித்துள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு  திட்டத்தை, தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதுவரை, குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி ஒதுக்கி வந்தது. 

தற்போது, குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்கும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்த உள்ளது.  இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த தைலாவரம் பகுதியில், புதிய திட்டத்தை குடிசை மாற்று வாரியம் செயல்படுத்துகிறது. தலா, 400 சதுர அடி பரப்பளவில், 480 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

வீடுகளை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய, குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வீடுகளுக்கு, 11.70 லட்சம் ரூபாய் தோராய விலையாக முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் சார்பாக 1.50 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். இதனால், 10.20 லட்ச ரூபாயை, ஆறு தவணைகளில் செலுத்தலாம்.

இந்தியாவில் வேறு எங்கும், தன் பெயரிலோ, குடும்பத்தினர் பெயரிலோ சொந்தமாக வீடு, மனை இல்லாதவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின், என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என, வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற டிசம்பர் 31, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News