தொடர்ந்து பெய்யும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு!
சென்னையில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் பல இடங்கள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. அதே போன்று குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.;
சென்னையில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் பல இடங்கள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. அதே போன்று குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வழிகிறது. நேற்று இரவு முதல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகின்ற நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy:Tour My India