மழை நீர் வடியாத செம்மஞ்சேரி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு.!

மழை நீர் வடியாத செம்மஞ்சேரி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு.!

Update: 2020-11-30 08:21 GMT

வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னை உட்பட பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில் வடியத் தொடங்கிவிட்டது. மீண்டும் இயல்பு நிலை திரும்பிவிட்டது. 

இந்நிலையில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். செம்மஞ்சேரியில் சில பகுதிகளில் மழை நீர் வடியவில்லை என செய்தி வெளியான நிலையில் இதன் எதிரொலியாக முதலமைச்சர் ஆய்வு நடத்தவுள்ளார்.


ஆனால் புயல் கடந்து கிட்டத்தட்ட 5 நாட்களாகியும் சென்னை அடுத்த செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடியாமல் இருப்பது அப்பகுதி வாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல தேங்கி உள்ளது. இதனை காண எந்த அதிகாரிகளும் வரவில்லை, குடிநீர் இல்லை, மின்சாரமும் வழங்கப்படவில்லை என அப்பகுதி வாசிகள் கவலை தெரிவித்தனர். முழங்கால் அளவு தேங்கியிருக்கும் இந்த வெள்ள நீரிலேயே அவர்கள் தற்போது வாழ பழகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News