சென்னையில் 36,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

சென்னையில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் மாநகரில் சுமார் 36000 வீடுகளுக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2021-11-11 08:37 GMT

சென்னையில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் மாநகரில் சுமார் 36000 வீடுகளுக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. ஒரு நிமிடம் இடைவெளியின்றி பெய்து வரும் மழையால் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்கள் இடுப்பளவு தண்ணீர் நின்றுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் இதனை அப்புறப்படுத்தாமல் இருப்பதாக பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர். மேலும், மழை நீர் தேங்கியுள்ளதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து அசுத்தமான குடிநீர் கிடைப்பதாக புகார்கள் வருகின்றது.

இந்நிலையில், சென்னை மாநகரில் உள்ள 36,000 மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை வசதிக்கு தேவையான தண்ணீரை எடுப்பதற்கு கூட மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதன்படி கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர், பெரம்பூர், வியாசர்பாடி மற்றும் வேளச்சேரி பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Kumudham


Tags:    

Similar News