சென்னையில் இல்லம் தேடி மழை நீர் திட்டம் !புதிய சாதனையில் விடியல் அரசு!
சென்னையில் நேற்று இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மழை பெய்யத் தொடங்கியது. இரவு முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. அதிலும் நள்ளிரவில் மிக அதிக கனமழை பெய்தது. இன்று காலையிலும் மழை நிற்காமல் பெய்வதால் சாலைகள், வீடுகள், தெருக்கள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தெருவில் வசிக்கும் ஏழைகள், நிற்க இடம் இன்றி பேருந்து நிறுத்தம் மற்றும் கடைகள் முன்பாக ஒதுங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது சென்னையில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதிகபட்சமாக டிஜிபி அலுவலகப் பகுதியில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் 21 செ.மீ. மழையும், அயனாவரத்தில் 18 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் கட்டில் மீதும், சோபா மீது மக்கள் அமர்ந்து பொழுதை கழிக்கும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு மழை நீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.
வெள்ள நீரில் பேருந்துகள் ஊர்ந்து செல்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் இடுப்பளவு நீரில் நடந்து கடைக்கு சென்று வருகின்றனர். சில இடங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியில் வரமுடியாமல் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலர் முகநூல் பக்கங்களில் இல்லம் தேடி மழைநீர் திட்டம் இதுதானா என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர். பலர் தங்களின் ஆதங்கத்தை திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: Social Media