மத்திய அரசினால் வேற லெவல் ஆக மாறப்போகும் சென்னை... கிராபிக்ஸ் காட்சி சும்மா அதிருதுல...
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு சாலையின் கிராபிக்ஸ் படத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில அனுமதிக்க அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்திலும் சாலை போக்குவரத்து குறித்தும் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டது. எனவே சாலைகளில் போக்குவரத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலைகள் தான் இன்னொரு நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது.
கிராமங்களில் நகரங்களுடன் இணைப்பதற்கு இந்த சாலைகள் மிகவும் முக்கியமான அங்கமாக திகழ்கிறது. அந்த வகையில் சென்னையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயில் ஈரடுக்கு சாலையின் கிராபிக்ஸ் படங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த கிராபிக்ஸ் படங்களின் வெளியீட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். கிராபிக்ஸ் படங்களை பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. உண்மையில் சென்னை வேற ஒரு இடத்திற்கு செல்ல போகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சாலைகள் அவ்வளவு கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar