சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்பநாய்களுடன் போலீசார் சோதனை.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடிதம் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-02-27 13:33 GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடிதம் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. இதனை உறுதிப்படுத்திக்கொண்ட ரயில்வே போலீசார் உடனடியாக ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழுவுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.


 



அந்த மர்ம கடிதத்தில் சென்னை சென்ட்ரல், மற்றும் விமான நிலையம், கொச்சின் விமான நிலையம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு அல்லது காரில் வெடிகுண்டு நிரப்பி வெடிக்க வைப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கடிதம் குறித்த ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தமிழகம், கேரளா மாநிலங்களில் மனித குண்டு வெடிக்க வைக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News