சென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.!

அண்ணாநகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது.

Update: 2021-04-14 11:36 GMT

கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை மக்களை வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மாநகரில் வெப்பம் அதிகளாக காணப்பட்டது. இதனால் மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு இருந்தனர். ஒரு புறம் கொரோனா அச்சுறுத்தல் மறுபுறம் வெயிலால் மக்கள் அவதிப்பெற்று வந்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.


 



இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதன்படி, அண்ணாநகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது.


 



திடிரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து வருகின்றது. இதனால் மக்கள் வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். தற்போது சாரல் மழையில் நனைந்தவாறு சென்னை மக்கள் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை வாசிகளை மழை குளிர்வித்துள்ளது இரட்டை மகிழ்ச்சியாக உள்ளனர்.

Similar News