சென்னையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளதாக கூறியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முறைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் அதிகமான பாதிப்புகள் சென்னையில்தான் உள்ளது. நாள் ஒன்றுக்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர்கள் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மயானங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு சடலங்களை எரிப்பதில் காலத்தாமதாம் ஆவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில வாரங்களாக வடநாட்டில் சடலங்கள் மயானங்களில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது தமிழகத்திலும் இந்த நிலைமை உருவாகியதை பார்த்து மக்கள் பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.