சென்னையில் ஐ.பி.எஸ்., அதிகாரி கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு.!
சென்னை, பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார.
கொரோனா தொற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தவர் காவல்துறை உதவி ஆணையர். தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் சென்னை காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.