சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்.!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்தை நெருங்கி வரும் சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது.

Update: 2021-03-20 03:33 GMT

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்தை நெருங்கி வரும் சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் முதலாவது அனைவரும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவை பிரதானமாகும். இதனிடையே மீண்டும் தடுப்பூசி போடும் பணியை அதிகரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


 



இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


 



மேலும், இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயனடையலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News