தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டது. அதன்படி நாளை ஞாயிறு (25ம் தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் நாளை தங்களது வழக்கமான பணிகளை தொய்வின்றி செய்வதற்கு ஏதுவாக மாநகராட்சி பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முககவசம் மற்றும் அடையாள அட்டையுடன் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.