சென்னையில் ஊரடங்கு போடாமலேயே கொரோனா கட்டுப்படுத்தப்படும்: கமிஷனர் பிரகாஷ்.!
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
சமீபத்தில் தஞ்சையில் 56க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் தொற்று தினமும் ஆயிரத்தை நெருங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, சென்னையில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதனால் நேரத்தில் தடுப்பூசி போடும் பணியை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு விதித்து தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இல்லை. எனவே மீண்டும் ஊரடங்கு போடப்படுகிறது என்று வதந்திகள் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.