சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.!
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அதிகாரி கடந்த 2020ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
இதனிடையே தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறார். அதன்படி தலைமைச்செயலாளர் முதல் தனிச்செயலாளர் வரை புதியதாக நியமனம் செய்து வருகின்றார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.