ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி !

சென்னையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறியதாக சென்னையில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-01 07:20 GMT

ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு, லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் முக்கிய பகுதிகளாக விளங்கும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி உட்பட 9 இடங்களில் கடைகள் அனைத்தும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறியதாக சென்னையில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஓட்டகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பொதுமக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மீறினால் ஓட்டல்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: News 7

Image Courtesy: சென்னை corporation

https://news7tamil.live/licenses-will-be-revoked-if-more-than-50-of-the-hotels.html

Tags:    

Similar News