மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் ஓடாது.!
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது எனவும், நாளை முதல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.;
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் இன்று இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இரவு நேர ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்தது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சமயங்களில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது எனவும், நாளை முதல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு 600க்கு பதில் 434 ரயில்களும், முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் 400க்கு பதில் 86 ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.