சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்.!
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதனால் சென்னையில் இன்று காலை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதனால் சென்னையில் இன்று காலை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி தமிழக அரசு அறிவிப்பின் படி மூன்றாம் வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்மாவட்டங்களிடையே பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் குளிர்சாதன வசதி இன்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால் நேற்று காலை முதல் அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியது. அதன்படி இன்று காலை முதல் பேருந்துகள் இயங்கியது. முககவசம் அணிந்து பேருந்துகளில் ஏறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.