இரட்டைப் பட்டப்படிப்பிற்கு அங்கீகாரம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்.!

ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-05-21 11:45 GMT

ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு, விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நேரடியாகவும், தொலைதூர படிப்பு மூலமும் ஒரே ஆண்டில் பட்டம் பெறுவதற்கு தடைவிதிக்க எந்த சட்டப்பிரிவும் இல்லை எனவும் வாதிட்டார்.

இரட்டைப் பட்டப்படிப்பை அனுமதிக்க முடிவு செய்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக யு.ஜி.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கை தனி நீதிபதி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Similar News