கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று திறப்பு.!

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (ஜூன் 1ம் தேதி) சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படுகிறது.

Update: 2021-06-01 03:48 GMT

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (ஜூன் 1ம் தேதி) சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக முழு அளவில் வழக்கு விசாரணை தற்போது நடக்காது என்று தெரிகிறது. வருகின்ற 11ம் தேதி வரை, முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 



கொரோனா தொற்று காரணமாக காணொலி வாயிலாக பல்வேறு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சட்டசபை தேர்தலுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மே மாதம் வெயில் அதிகரிப்பு காரணமாக கோடை விடுமுறை உயர் நீதிமன்றத்துக்கு விடப்பட்டது. ஆனாலும் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News