வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினால் என்ன? தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படவும் தயங்க மாட்டோம். நீதிமன்றம் அறிவுரையை காதில் வாங்காமல் இருந்ததே கொரோனா பரவலுக்கு அதிகக்காரணம்.

Update: 2021-04-26 07:09 GMT

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரிணைக்கு வந்தது. 'கொரோனா 2வது அலை தீவிரம் அடைவதற்கு முழு காரணமே தேர்தல் ஆணையம்தான். தற்போது கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. எனவே உங்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தப்பில்லை. தேர்தல் பரப்புரையில் செய்தபோது தேர்தல் ஆணைய அதிகாரிகள் எங்கிருந்தீர்கள்.




 


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படவும் தயங்க மாட்டோம். நீதிமன்றம் அறிவுரையை காதில் வாங்காமல் இருந்ததே கொரோனா பரவலுக்கு அதிகக்காரணம்.

மேலும், சுகாதார செயலாளர் மற்றும் இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தற்போது நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தால் திமுக கடும் அப்சட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


 



தேர்தல் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பீதியுடனே காணப்படும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். கன்டெய்ணர் சென்றால் உடனே தடுத்து நிறுத்துவது, டிஸ் ஆண்டெனாவை அகற்ற சொல்வது, வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா மற்றும் லேப்டாப்பை கண்டால் போராட்டம் நடத்துவதை தொடர்ந்து வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

தற்போது வாக்கு எண்ணிக்கைக்கு தடை போட்டால் திமுகவினர் உண்மையிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றது.

Similar News