புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்துவ ஆலயமா.. கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..
நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு.
தற்பொழுது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகவும் சில செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு புறம்பான புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழக்கில் மாவட்ட கலெக்டர் உடனடியாக நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட தடை கோரிய வழக்கில் ஈரோடு ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில் இந்த ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் மொட்டக்குறிச்சி தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த ஒரு நத்தம் புறம்போக்கு நிலத்தில் தான் உரிய அனுமதிகள் எதுவும் பெறாமல் தேவாலயம் அனுமதிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அரசு புறம்போக்கு நிலங்களை மதரீதியாக பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் பொழுது, அரசுக்கு சொந்தமாக இருக்கும் புறம்போக்கு நிலத்தை எப்படி தேவாலயம் கட்ட நிர்வாகம் அனுமதித்தது? அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் இந்த வழக்கு ஜூன் 13ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உரிய நபர்கள் விசாரணைக்கு வரவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியாளர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News