சென்னை ஐஐடி.. 200ஐ நெருங்கும் கொரோனா.. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லையா.?

சென்னை ஐஐடி.. 200ஐ நெருங்கும் கொரோனா.. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லையா.?

Update: 2020-12-15 11:40 GMT

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை ஐஐடியில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை 104 ஆக இருந்தது.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் தான் ஐஐடி கல்லூரியில் கொரோனா வேகமாக பரவியது. இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமே மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கல்லூரியில் உள்ள மெஸ் மூலமாகத்தான் கொரோனா பரவியுள்ளது.

இருப்பினும் ஐஐடியில் கொரோனா பரவல் எதிரொலியாக மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தென்பட்டாலே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படிக்காதவர்களே கொரோனா பற்றி விழிப்புணர்வோடு உள்ளனர். ஆனால் படித்த மாணவர்கள் ஏன் இப்படி அஜாக்கிரதையாக உள்ளனர் என்று தெரியவில்லை. முககவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாணவர்கள் அனைவரின் கடமையும் கூட. இனிமேலாவது முறையாக பின்பற்றினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம்.
 

Similar News