சென்னை: லாக்டவுன் குறித்த சந்தேகங்களுக்கு காவல்துறை சார்பில் உதவி மையம்.!
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாநகர காவல்துறை சார்பில் கொரோனா ஊரடங்கு நேர உதவி மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
9498181236, 9498181239 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை கேட்கலாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.