கொரோனா தொற்று.. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7ம் தேதி வரை ரத்து.!
சென்னையில் மெட்ரோ சேவை வருகின்ற ஜூன் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ சேவை வருகின்ற ஜூன் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் இயக்கப்படாது எனவும் அரசு கூறியிருந்தது.
அதில் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் இணைந்துள்ளது. அதன்படி வருகின்ற 7ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்காது என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.