சென்னையில் இந்த வயதுடையவர்களே அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள்.!

தினமும் ஒரு லட்சத்தை கடந்து செல்வதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-04-08 03:51 GMT

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த ஆண்டு முதியவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த வருடம் இளைஞர்கள் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.




 


கொரோனா தொற்று இந்தியாவில் 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. முன்பைவிட தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஒரு லட்சத்தை கடந்து செல்வதால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில்தான் தொற்று அதிகமாக பதிவாகிறது. இதில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதினர் 18.37 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Similar News