சென்னை: கொரோனா பரிசோதனைக்கு சென்ற பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இஸ்லாமியர்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. இதனால் பரிசோதனையை அதிகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளது. அதன்படி வீடு, வீடாக சென்று பொதுமக்களிடையே காய்ச்சல், சளி பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஏழுகிணறு பகுதியில் முன்கள பணியாளராக இளம் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது போர்ச்சுகீசு சர்ச் தெருவில் ஒரு குடியிருப்பில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சதக்கத்துல்லா என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சதக்கத்துல்லா வீட்டிற்கு சென்ற முன்கள பணியாளர், யாராவது காய்ச்சல், சளி போன்ற அறிகுறியால் அவதிப்படுகின்றனரா என கேட்டுள்ளார். இதனையடுத்து ஆம், வீட்டில் எனது மனைவி காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். வந்து பரிசோதனை செய்யுங்கள் என சதக்கத்துல்லா கூறியுள்ளார். இதனையடுத்து முன்களப் பணியாளரான பெண் வீட்டிற்கு சென்றபோது, சதக்கத்துல்லா கதவை மூடியுள்ளார்.
இதனையடுத்து பெண் முன்களப்பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சதக்கத்துல்லாவை வெளு வெளுனு, வெளுத்துள்ளனர். இதன் பின்னர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட முன் களப்பணியாளரான இளம் பெண் கொடுத்தப் புகாரில் பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.
கைதானவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் மற்றொரு வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இளம் பெண் முன்களப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.