பப்ஜி மதனை வலைவீசி தேடி வருகிறோம்: சென்னை காவல் ஆணையர்.!
இதனையடுத்து மதன் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
யூ-டியூப் சேனலில் மிகவும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது பற்றிய புகாரில் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மதன் விளையாடி அதில் ஆபாசமாக பேசி யூடியூப்பில் அப்லோடு செய்துள்ளார். இதனை பார்ப்பவர்கள் அதிகம் பேர் சிறுவர்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து மதன் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம். சமூக வலைதளங்களில் குற்றங்களைக் கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.