அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கும் காவல் ஆணையர்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-10-06 02:55 GMT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னை டிபிஜ வளாகத்துக்கு வரவழைக்கப்படடு அவர்களுக்கு போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஒரு சிலர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடைபெற்றதாக தகவல் வெளியாகியது. இதே போன்று மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் குவியத் தொடங்கியது. இது பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:

அரசு வேலை வாங்கித் கொடுப்பதாக, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக, அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டி பொதுமக்களை நம்ப வைத்து சிலர் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். எனவே அரசு வேலைக்காக தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Hindu Tamil


Tags:    

Similar News