சென்னையில் 179 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்.!
சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் இதே போன்று சென்னையில் மட்டும் சுமார் 277 காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் ஆய்வாளர்கள் ஒரே காவல் நிலையத்தில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் அவர்கள் வேறு ஒரு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பின்னர் தற்போது 179 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து கமிஷ்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.