டூ வீலரில் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை.!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கின்போது வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2021-05-14 04:49 GMT

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கின்போது வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு ஊரங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காமல் சுற்றி வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.


 



அரசு அனுமதி அளித்த நேரத்தை தாண்டியும் பொதுமக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து போலீசாரும் முழுஊரடங்கை முறையாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News