ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஆன்லைனில் முன்பணம் செலுத்தி ஏமாறாதீர்கள்: காவல்துறை எச்சரிக்கை.!
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சமூகவலைதளங்கள் மூலமோ வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றை போக்குவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் அம்மருந்துக்கு தேவை அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு பலர் அதிகளவு பணத்தை கொடுத்து ஏமாந்து போகின்றனர். அது போன்றவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இது பற்றி சென்னையில், கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14 வழக்குகள் பதிவாகியுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கி பதுக்கியதாகவும், அதிக விலைக்கு விற்றதாகவும் இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாரும் போலியான விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகிவற்றின் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதாக எண்ணி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.