சென்னையில் அதிகாலை முதல் கனமழை.. சில மணி நேரம் மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்.!

சென்னை புறநகர் பகுதியான பெங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-15 02:49 GMT

சென்னையில் வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையில் நேற்று மாலை முதல் ஆங்காங்கே பல்வேறு இடங்களில பரவலமாக மழை பெய்து வந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மேலும் ஒரு சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று கிண்டி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராமாபுரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதியான பெங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

Similar News