சென்னையில் 'தி இந்து' பத்திரிகையாளர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு.!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்து பத்திரிகையை சேர்ந்த செய்தியாளர் பிரதீப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பத்திரிகையாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்து பத்திரிகையை சேர்ந்த செய்தியாளர் பிரதீப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பத்திரிகையாளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரதீப் சென்னையில் உள்ள அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
அவர் கடந்த 2014ம் ஆண்டு 22 வயதில் பத்திரிகை துறையில் நுழைந்தார். இவர் டெக்கான் க்ரானிக்கில், டைம்ஸ் ஆப் இந்தியா, உள்ளிட்ட பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றியுள்ளார். இவர் சென்னையில் பாதாள சாக்கடையில் ஏற்படும் கழிவுகளை மனிதர்களே நேரடியாக இறங்கி அள்ளும் அவலம் குறித்து கட்டுரைகளாக வழங்கியுள்ளார்.
பிரதீப்க்கு விரைவில் திருமணம் நடத்த அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.