சென்னை, பாரிஸ் இடையே நேரடி விமான சேவையை தொடங்கிய ஏர் பிரான்ஸ்.!

பிரான்ஸ் தலைநகரான பாரிசிஸ், சென்னை இடையே நேரடியாக விமான சேவையை ஏர் பிரான்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த சேவை முதன் முதலாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-06-26 06:49 GMT

பிரான்ஸ் தலைநகரான பாரிசிஸ், சென்னை இடையே நேரடியாக விமான சேவையை ஏர் பிரான்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த சேவை முதன் முதலாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், இதுவரை சென்னையில் இருந்து பாரிசுக்கு செல்பவர்கள் அனைவரும் டெல்லி, மும்பை அல்லது பெங்களூரு வழியாகவோ அல்லது துபாய் வழியாகவோ சென்று வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 10.25 மணிக்கு பாரிசில் இருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் நேரடியாக இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தடையும். 28ம் தேதி காலை 1.20 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து பாரிசுக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை சென்னையில் இருந்தும் சேவை நடைபெறும். பின்னர் திங்கள், புதன், வெள்ளி என வாரத்திற்கு 3 நாட்கள் சென்னையில் இருந்து விமானம் புறப்படும் என ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

Similar News