சென்னையில் இரவு நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை.!
பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு பெய்த மழையால் நல்ல இதமான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை பெய்தது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருவான்மியூர், அடையாறு, வளசரவாக்கம், வடபழனி, போரூர் உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை கனமழை நீடித்தது.
பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு பெய்த மழையால் நல்ல இதமான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.