மீன் தட்டுப்பாடு எதிரொலி.. சிக்கன், மட்டன் விலை கிடுகிடு உயர்வு.!
இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிக்கன், மட்டன் கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ சிக்கல் ரூ.240 முதல் ரூ.250வரை விற்கப்பட்டது. தோல் உரிக்காத கோழி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்கப்பட்டு வருகிறது.;
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மீன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடல், ஏரி மீன்கள் குறைவான அளவில் வருகிறது. இதனால் மீன் அதிகம் சாப்பிடும் பலர் தற்போது சிக்கன், மட்டன் வாங்கத்தொடங்கியுள்ளனர்.
இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிக்கன், மட்டன் கடைகளில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ சிக்கல் ரூ.240 முதல் ரூ.250வரை விற்கப்பட்டது. தோல் உரிக்காத கோழி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்கப்பட்டு வருகிறது.
அதே போன்று உயிருடன் முழு கோழி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிக்கன், மட்டன் விலை சற்று குறைந்து விற்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளில் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.