சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி கட்டண விபரத்தை வெளியிட்ட தமிழக அரசு.!

சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி கட்டண விபரத்தை வெளியிட்ட தமிழக அரசு.!

Update: 2021-02-04 19:19 GMT

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்து வருவதாக மாணவர்கள் புகார் கூறிவந்தனர். மேலும், அரசு கல்லூரிகளில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுமோ அந்த கட்டணமே இந்த கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும், சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தை கொண்டுவர வேண்டும் என மாணவர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்போது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கட்டணம் விவரம் பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610 கட்டணம், பி.டி.எஸ் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். கடந்த 50 நாட்கள் நடத்திய போராட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News