தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை.. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை.!
தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை.. சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை.!;
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகின்றார்.
தமிழக சட்டமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹீ தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி பணிகளை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
மேலும், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கலாம் என்பன பற்றியும் ஆலோசனை நடத்தப்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்கிறார்.