புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்.!

புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்.!

Update: 2020-12-05 16:11 GMT

புயல் மழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் புரெவி புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பலர் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரெவி புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த புயலால் 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும், 75 குடிசை வீடுகள், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 1725 குடிசை வீடுகள், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். அதே போன்று புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News