தென் மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.. திடீர் கட்டளையிட்ட முதலமைச்சர் பழனிசாமி.!

தென் மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.. திடீர் கட்டளையிட்ட முதலமைச்சர் பழனிசாமி.!

Update: 2020-12-01 15:22 GMT

தென்தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 


இந்நிலையில், அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்திய நிவர் புயல் கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் பலத்த சேதங்களும் ஏற்பட்டது.


இந்நிலையில், மீண்டும் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை காலை புயலாக வலுப்பெறும் என்றும் இதற்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ‘புரெவி’ குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிசம்பர் 4ம் தேதி வரை பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அண்டை மாநிலப் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனே அந்தந்த மாநிலங்களில் கரையேறுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மக்கள் முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மின் கம்பிகள், மின் மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என்றும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக புயல் பற்றிய அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
 

Similar News