ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் தொழிலாளர்களா.. நடந்தது என்ன?

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமரத்தப்பட்டது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-10 03:13 GMT

அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் குழந்தைகள் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதுமட்டுமில்லாத குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணியில் அமர்த்தபட்டதாகவும், தங்களுக்கு உரிய ஊதியத்தை நிர்வாகம் தரவில்லை என்று நேற்று முன்தினம் ஆவின் நிறுவனம் வாயில் தரப்பில் முன் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தொடர்பான வீடியோ தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணியாற்று வருவதாக குறிப்பிடப் பட்டு இருக்கிறது. 


குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த ஒரு மாதங்களாக தங்களுக்கு உரிய ஊதிய வழங்கப்படவில்லை என்று குழந்தை தொழிலாளர்கள் மட்டுமல்ல அது ஒப்பந்த ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் ஆவினில் குழந்தைகளை பணியில் அமர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை இது பற்றி கூறும் பொழுது சிறார்கள் அங்கு வேலை பார்ப்பதாக வெளியான காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த சர்ச்சைக்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "குழந்தை தொழிலாளர்கள் யாரும் அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாகத் என்றும், அந்த காணொளி போலியானது" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News