பாரம்பரிய நெல் வகைகளை தமிழக அரசு மீட்க வேண்டும்: இயற்கை விவசாயி கோரிக்கை!
பாரம்பரிய நெல் வயலில் மூவேந்தர்கள் கொடியை உருவாக்கிய இயற்கை விவசாயி.
காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி ஒருவர் தன்னுடைய வயலில் மூவேந்தர்கள் கொடிகள், தமிழக அரசின் சின்னம் ஆகியவற்றை வயல்களுக்கு நடுவில் கருப்பு கவுனி நெல் நாற்றுக்களால் வடிவமைத்து இருக்கிறார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து இருக்கின்ற மலவராயன் நல்லூரை சேர்ந்தவர் விவசாயி செல்வம் என்பவர். இவர் ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் ரகம் ஒன்றை பயிரிட்டு, அந்த நெல்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த சேவையை இவர் செய்து வருகிறார். கருப்பு கவுனி, பூங்காறு, சொர்ணமுகி உள்ளிட்ட 15 இருக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை பகிர்ந்து விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வருகிறார்.
இந்நிலையில் செல்வம் மூவேந்தர்களை கௌரவிக்கும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது வயலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் வடிவமைத்து இருக்கிறார்.
பச்சை பசேல் என உள்ள நெல் வயல் நடுவில் இந்த வடிவங்களை பாரம்பரிய நெல் வகைகளாக கருப்பு கவுனி நாற்றுக்களை பயன்படுத்தி அமைத்து இருக்கிறார். மேலும் இது பற்றி அவர் கூறுகையில், "தனது பாரம்பரிய நெல் ரகங்களை தாக்கும் நோய் தாக்கும் திறன் கொண்டவை. அவற்றை பயிரிட்டு விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு எடுத்து வருகிறேன். தமிழக அரசு பாரம்பரிய நெல் வகைகளை மீட்க வேண்டும் " என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar