திராவிடக் கொள்கைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் முன்னோடி - உண்மையை ஒப்புக்கொண்ட சபாநாயகர் அப்பாவு!

அனைவரும் சமம் என்கின்ற திராவிட கொள்கைக்கு கிறிஸ்துவ அமைப்புகள் முன்னோடியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

Update: 2022-11-06 08:20 GMT

திருநெல்வேலி பாளையங்கோட்டை கத்தோலிக்க கிறிஸ்தவ முறை மாவட்டத்தின் திருநெல்வேலி சமூக சேவை சங்க பண்பு விழா KPC நகரில் நடைபெற்றது. இதில் பாளையம் கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் அப்பாவும் சிறப்பு விருந்தினராக இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர், நெல்லை மாவட்ட கலெக்டர் போன்ற பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் சபாநாயகர் அப்பாவும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகையில், கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு சமுதாயப் பணிகளை அடித்தட்டு மக்களுக்கு செய்து வருகிறது. எல்லோரும் கல்வி கற்க வேண்டும். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இந்த தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் கிறிஸ்தவர்களை மட்டும் கல்வி கற்க வைக்காமல் அனைத்து மதத்தினரையும் கல்வி கற்க வைத்துள்ளார்கள்.


அனைவருக்கும் கல்வி சாலைகளை உருவாக்கி கொடுத்தார்கள். பாளையங்கோட்டையில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்கினார்கள். இந்த சமுதாயப் பணி செய்பவர்களுக்கு இடையூறாக இருப்பவர்களை தட்டிக் கேட்க வேண்டும். மேலும் அனைவரும் சமம் என்று திராவிடக் கொள்கைக்கு கிறிஸ்துவ அமைப்புகள் முன்னோடியாக திகழ்கின்றது என்று கூறுகிறார். மேலும் சிலர் ஜாதி மற்றும் மதத்தின் பெயர்களால் பிரிவினைகளை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News