போலி பாஸ்போர்ட்டில் 6 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்த கிறிஸ்துவ மதபோதகர் - அப்படியே தூக்கி உள்ளே வைத்த மத்திய குற்றப்பிரிவு

சென்னையில் சட்டவிரோதமாக ஆறு ஆண்டுகள் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பெண் மத போதகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-09-19 06:58 GMT

சென்னையில் சட்டவிரோதமாக ஆறு ஆண்டுகள் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பெண் மத போதகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் குடியேற்றத்துறை அதிகாரி நிபின் ஜோசப் கடந்த 16ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார்.


அந்த புகாரில் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மரிய செல்வம் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட்டுக்காக பதிவு செய்தார் அப்போதா அவர் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலியான தெரியவந்தது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


இந்த புகாரை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மரிய செல்வம் இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்து மத போதகரானது பின்னர் அண்ணா நகர் வடக்கு பகுதியில் ஆறு ஆண்டுகளாக குடியிருப்பதும் போலி ஆதார் அட்டை பெற்று வங்கி கணக்குகள் தொடங்கிய அதன் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாஸ்போர்ட் நிறுவனத்தில் இந்திய குடியுரிமை பெற்ற நபர் எனவும் தெரியவந்தது இவர் இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் இலங்கை பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்ததற்கான ஆதாரங்களும் அதை உறுதி செய்தனர் போலீசார் அந்த போலி மத போதகரை கைது செய்தனர்.


Source - Dinakaran

Similar News