திருநெல்வேலியில் கோவிலுக்கு அருகில் பிணத்தை புதைக்க வந்த பாதிரியார் கும்பல் - இந்து ஆர்வலர்கள் திரண்டதால் அம்பலமான சம்பவம்!
Christians try to bury a corpse near temples in Tirunelveli
திருநெல்வேலியில் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தில் சடலத்தை புதைக்க மதபோதகர்கள் மேற்கொண்ட முயற்சியை இந்து அமைப்புகள் முறியடித்துள்ளன. மணிமூர்த்தீஸ்வரத்தில் ஒரு கோயிலுக்கு எதிரே உள்ள நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டு, இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி சங்கரன்கோவில் அருகே பாதிரியார் மற்றும் அவரது கூட்டாளிகள் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்தினர். உடனே பாதிரியாருடன் வந்த கும்பல் சங்கரன்கோவில்-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் பிணத்தை கிடத்திவிட்டு, தண்ணீர்க் குழாயையும் சேதப்படுத்தினர். கோவில்களை அசுத்தப்படுத்துவதையும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையும் பாதிரியாரை தடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த, காவல்துறையினரை இந்து ஆர்வலர்கள் அழைத்தனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில், பாதிரியாரும் அவருடன் வந்தவர்களும் சடலத்தை சம்பந்தப்பட்ட நிலத்திற்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுக்க முயன்ற இந்துக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணலாம். கோவில்கள் இருப்பதால் சம்பந்தப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய முடியாது என இந்துக்கள் கூறுகின்றனர். அனுமதிக்காவிட்டால் சடலத்தை சாலையில் போடுவதாக கிறிஸ்தவர்கள் மிரட்டுகின்றனர். பின்னர் போலீசார் வந்து, பாதிரியாரை சமாதானப்படுத்தி பிரச்னையின் தீவிரத்தை புரிந்துகொண்டு சடலத்தை வேறு இடத்தில் புதைத்தனர்.
இதே போல திருநெல்வேலி மாவட்டத்தில், மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற உச்சிஷ்ட கணபதி கோவில் எதிரில் உள்ள ஏஜி சர்ச் நிலத்தை விலைக்கு வாங்கி, அதை மயானமாக பயன்படுத்தி வருகிறது . கோவிலை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது. இது சமய அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திட்டமிட்டு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.