சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்‌ வழங்கி தேர்ச்சி என அறிவிப்பு.!

சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்‌ வழங்கி தேர்ச்சி என அறிவிப்பு.!

Update: 2020-10-18 18:22 GMT

அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.




தமிழக அரசு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்விற்காக காத்திருக்கும் மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரியர் பாடங்களில் தேர்ச்சி என்று அறிவித்தது. இதனை எதிர்த்து வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க சிண்டிகேட் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற்று விட்டோமா இல்லையா என்று நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த செய்தி சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே போல் ஒரு அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்தும் வெளியிடப்படுமா என்று பொறியியல் மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தமிழக அரசிற்கும் எதிரான பனிப்போர் நிகழ்ந்து வருவதால் அரியர் விவகாரத்தில் அரசு எடுத்த முடிவை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஏ.ஐ.சி.டி.இ அறிவுறுத்தலின் பெயரில் அரியர் மாணவர்களை தேர்ச்சி செய்யாமல் தேர்வு எழுத சொல்லுமா என்று மாணவர்கள் டுவிட்டரில் தங்களது கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

எதுவாக இருப்பினும் அரசும் அண்ணா பல்கலைக்கழகமும் மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு கூடிய விரைவில் தங்கள் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினால் மாணவர்கள் தங்கள் தேர்விற்காக படிக்கத் துவங்குவார்கள் என்று பெற்றோர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Similar News